சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது


சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூத்த பூவின் புகைப்படம் - நாசா வெளியிட்டது
x

2015-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் பூச்செடியை வளர்க்கத் தொடங்கியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில் விண்வெளியில் பூத்த 'ஸின்னியா' பூவின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது. இந்த பூச்செடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து வளர்க்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செடிகளை வளர்ப்பது தொடர்பாக 1970-களில் இருந்தே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் பூச்செடியை 2015-ம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் வளர்க்கத் தொடங்கியுள்ளார். விண்வெளி ஆய்வின் ஒரு பகுதியாக இந்த செடி வளர்ப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் ஆய்வு செய்வதன் மூலம், விண்வெளியில் பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், நீண்ட கால விண்வெளி பயணங்களில் புதிய உணவு ஆதாரங்களை உருவாக்க முடியும் என்றும் நாசா கூறியுள்ளது.

மேலும் நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரை, தக்காளி, மிளகு போன்றவற்றையும் மற்ற காய்கறிகளுடன் பயிரிட்டுள்ளனர் என்றும், இன்னும் ஏராளமான தாவரங்கள் வளர்க்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.



Next Story