வால்மார்ட் அங்காடி விமானம் மூலம் தகர்க்கப்படும்: விமானி மிரட்டலால் அமெரிக்காவில் பரபரப்பு


வால்மார்ட் அங்காடி விமானம் மூலம் தகர்க்கப்படும்: விமானி மிரட்டலால் அமெரிக்காவில் பரபரப்பு
x

அமெரிக்காவில் உள்ள பிரபல வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29- வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விமானத்தில் பறந்தபடி சுற்றி வரும் இளைஞர், விமானத்தை திருடிச்சென்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

1 More update

Next Story