அடுக்குமாடி குடியிருப்பு மீது விமானம் மோதி பயங்கர தீ விபத்து - 2 பேர் பலி

Image Courtesy: necn.com
அடுக்குமாடி குடியிருப்பு மீது விமானம் மோதிய சம்பவத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூ ஹாம்ஷர் மாகாணம் கேனி நகரில் உள்ள விமான நிலையம் அருகே நேற்று இரவு சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் விமானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பில் இருந்த 8 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story