ஜனாதிபதி திரவுபதி முர்மு அந்தமானில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவை பார்வையிடுகிறார்


ஜனாதிபதி திரவுபதி முர்மு அந்தமானில் உள்ள கேம்ப்பெல் விரிகுடாவை பார்வையிடுகிறார்
x
தினத்தந்தி 20 Feb 2024 9:10 AM GMT (Updated: 20 Feb 2024 12:06 PM GMT)

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5 நாட்கள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு நேற்று சென்றார்.

போர்ட்பிளேர்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 5 நாட்கள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு நேற்று சென்றார். போர்ட்பிளேர் விமான நிலையத்தில் அவரை, துணை நிலை கவர்னர் டி.கே.ஜோஷி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து நேற்று வரலாற்று சிறப்புமிக்க செல்லுலார் சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அந்த சிறைச்சாலையில், வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டு இருந்த அறையையும் பார்வையிட்டார்.

இதையடுத்து, இன்று இந்திரா பாயிண்ட் மற்றும் கேம்ப்பெல் விரிகுடா செல்கிறார். அதன்பிறகு மதியம் 1.30 மணியளவில் பழங்குடியினரின் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து மாலை 4 மணியளவில் போர்ட்பிளேரை வந்தடையும் ஜனாதிபதி முர்மு மாலை 4.30 மணிக்கு ஒரு படகில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவிற்கு (முன்னர் ராஸ் தீவு என்று அழைக்கப்பட்டது) செல்கிறார். இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் ஜனாதிபதி போர்ட்பிளேருக்கு வந்தடைகிறார்.

நாளை ஜனாதிபதி முர்மு போர்ட்பிளேரில் உள்ள ராஜ் நிவாஸில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடி குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 23-ம் தேதி அன்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.


Next Story