இலங்கை வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே


இலங்கை வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் - அதிபர் ரணில் விக்ரமசிங்கே
x

இலங்கை வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்தார். ஆனால் இதற்கு சிங்களர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இலங்கையின் வடக்கு பிராந்திய வளர்ச்சி குறித்து பேசினார். அத்துடன் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக வடக்கிற்கான முக்கிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடக்கு பிராந்திய பொருளாதாரத்தை போர் சீரழித்து விட்டது' என்று கவலை தெரிவித்தார். வடக்கு பிராந்திய வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறிய ரணில் விக்ரமசிங்கே, ஒற்றையாட்சிக் கொள்கையின் கீழ் வடக்குப் பகுதிக்கு அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.


Next Story