சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவரின் பெற்றோருக்கு தண்டனை...? அமெரிக்காவில் அதிரடி


சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவரின் பெற்றோருக்கு தண்டனை...? அமெரிக்காவில் அதிரடி
x

அமெரிக்காவில், தங்களுடைய குழந்தைகள் செய்த குற்றத்திற்காக முதன்முறையாக அவர்களின் பெற்றோர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படித்த மாணவர் ஈதன் கிரம்பிளே (வயது 17). கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் சக மாணவர்கள் 4 பேரை சுட்டு கொன்றுள்ளார். அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவரின் பெற்றோர் ஜேம்ஸ் கிரம்பிளே (வயது 47) மற்றும் ஜெனிபர் கிரம்பிளே (வயது 45). இந்த படுகொலை வழக்கில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கூறும்போது, ஜெனிபருக்கு அவருடைய மகன் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என நன்றாக தெரியும்.

அவருக்கும், அவருடைய பெற்றோருக்கும் ஈதன் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவர் என நன்றாக தெரிந்து இருந்தும், துப்பாக்கியை எடுப்பது போல் வைத்திருக்கின்றனர்.

ஜெனிபர் துப்பாக்கியை எடுத்து சுடவில்லை. ஆனால், இந்த மரணங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான சிறிய மற்றும் எளிய விசயங்களை கூட அவர் செய்யவில்லை என கூறினார்.

எனினும், ஜெனிபருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் ஷன்னான் ஸ்மித், சக மாணவர்கள் 4 பேரை தன்னுடைய மகன் துப்பாக்கியால் சுட போகிறான் என்ற எந்த விவரமும் ஜெனிபருக்கு தெரிந்திருக்க வழியில்லை. அவருடைய மகன் பள்ளிக்கு ஒரு துப்பாக்கியை எடுத்து செல்வான் என்றோ, துப்பாக்கி சூடு நடத்துவான் என்றோ ஜெனிபரின் கவனத்திற்குள் வரவில்லை என்றும் வாதிட்டார்.

ஈதன் துப்பாக்கி சூடு நடத்த கூடிய துப்பாக்கியை பயன்படுத்த முடியாத அளவுக்கு உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஜெனிபரை விட ஜேம்ஸ் கிரம்பிளேவுக்கே உள்ளது என்றும் ஸ்மித் வாதிட்டார்.

ஆனால், ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியபோது, பிரையன் மெலோச் என்பவருடன் ஜெனிபர் தகாத உறவில் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, கோர்ட்டில் மெலோச் ஒப்பு கொண்டுள்ளார். தீயணைப்பு துறை தலைவராக உள்ள மெலோச் மற்றும் ஜெனிபர் இணைந்து ஓட்டல்களில் செக்ஸ் பார்ட்டிகளையும் நடத்தியுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஸ்விங்கர்ஸ் என்ற செயலி வழியே பல நபர்களையும் கண்டறிந்து அவர்களை ஓட்டலில் ஒன்றாக சந்திக்க வைக்கும் வேலையை, தங்களுடைய பணி முடிந்த பின்னர் செய்து வந்து உள்ளனர் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கின்றது.

வேறு வேறு நபர்களை ஒன்றாக சந்திக்க செய்யும் வேலையை, இந்த செயலி வழியே மேற்கொண்ட விவரங்களை ஜெனிபரும் கோர்ட்டில் ஒப்பு கொண்டிருக்கிறார். எனினும், வர்த்தகம் சார்ந்த பணிகளை முடித்த பின்னரே ஓட்டல்களுக்கு செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மனித படுகொலைகளை செய்ததற்காக ஈதனின் பெற்றோருக்கு எதிராக தனித்தனியாக கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவில், தங்களுடைய குழந்தைகள் செய்த குற்றத்திற்காக முதன்முறையாக அவர்களின் பெற்றோர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று வழக்கு விசாரணை நடந்தது. இந்த படுகொலை குற்றச்சாட்டுகளின் பேரில் கிரம்பிளே தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை முதல், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை கூட தண்டனையாக விதிக்கப்பட கூடிய சூழல் காணப்படுகிறது.


Next Story