காலம் மாறி போச்சு....ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்


காலம் மாறி போச்சு....ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்
x
தினத்தந்தி 28 Nov 2023 12:56 PM GMT (Updated: 29 Nov 2023 5:49 AM GMT)

புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன.

டக்கா,

அண்மை காலமாக திருமண தம்பதியினர் தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய நிறைய வித்தியாசமான முறையில் யோசித்து வருகிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழையும் வடிவமைக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

சமீபத்தில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு திருமண ஜோடி, அழைப்பிதழை ஆக்கப்பூர்வமான சிந்தனையை எடுத்து, டேப்லெட் ஸ்டிரிப்பின் பின்புறம் போல வடிவமைத்துள்ளனர்.

இது போன்ற புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் ஒரு பிஎச்டி முடித்த ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது வைரலாகி வருகிறது.


Next Story