உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு


உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு
x

ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் ராணுவம் இன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. மாஸ்கோ பிராந்தியத்தை குறிவைத்து நடந்த இந்த தாக்குதலை முறியடித்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகருக்கு மேற்கே ரஸ்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைனின் ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், அருகிலுள்ள இஸ்ட்ரின்ஸ்கி மாவட்டத்தில் மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இந்த ட்ரோன்களின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

ட்ரோன் தாக்குதல் காரணமாக மாஸ்கோவின் 4 முக்கிய விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலையங்களில் இருந்து சுமார் 50 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தடைசெய்யப்பட்டது.


Next Story