ரஷிய போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்து விபத்து - விமானிகளை தேடும் பணி தீவிரம்


ரஷிய போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்து விபத்து - விமானிகளை தேடும் பணி தீவிரம்
x

ரஷிய போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மாஸ்கோ,

ரஷியாவின் கம்ஷதா தீபகற்பத்தில் இருந்து அவாஷா வளைகுடாவில் பசுபிக் கடலில் இன்று ரஷிய போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

அப்போது, மிக்-31 ரக போர் விமானம் பசுபிக் கடலில் விழுந்த்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் 2 பேர் கடலில் விழுந்தனர்.

கடலில் விழுந்த விமானிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதேவேளை, போர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து ரஷிய விமானப்படை இதுவரை தகவல் வெளியிடவில்லை.


Next Story