கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் - 13 பேர் பலி


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் - 13 பேர் பலி
x

image courtesy: AFP

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்.

இட்லிப்,

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். இது இந்த ஆண்டு சிரியாவின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் என்று பார்க்கப்படுகிறது.

இட்லிப் பகுதியில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷுகூரில் உள்ள காய்கறி சந்தையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பொதுமக்கள் உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பொதுமக்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

1 More update

Next Story