#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி


#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 25 Jun 2022 7:36 PM GMT (Updated: 26 Jun 2022 12:09 PM GMT)

கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சித்து வருகின்றன.


Live Updates

  • 26 Jun 2022 12:09 PM GMT

    ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகள் ரஷிய எரிவாயுத் தடையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிகாரி கூறியுள்ளார்.

    உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷியாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், சர்வதேச தடைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்பதையும், ரஷிய எரிவாயு மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் உள்ளடக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது என்று உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • 26 Jun 2022 9:19 AM GMT

    உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் திடீர் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ப்பு!

    கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றிய நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா மீண்டும் திடீரென தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கீவ் நகரத்தில் இரண்டு குடியிருப்புக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது குறித்து, கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், கிழக்கு உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் ரஷிய துருப்புக்கள் தங்கள் படைகளை ஒருங்கிணைத்தது. எனவே ரஷியப் படைகள் கீவில் குறைந்தது இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை தாக்கின. இந்த கொடூர தாக்குதலில், இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிட்ச்கோ கூறினார்.

    மேலும், கீவில் உள்ள அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர்கள், தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் மீட்புப்பணிகள் நடைபெறுவதை உறுதிபடுத்தியுள்ளனர்.

  • 26 Jun 2022 6:01 AM GMT

    கீவ் நகரத்தை பாா்வையிடுகிறாா் இந்தோனேசியா அதிபா்

    ரஷிய-உக்ரைன் போா் நிறுத்தப்பட வேண்டும். உலகளவிய உணவு விநியோக சங்கிலி மீண்டும் செயல்பட வேண்டும் என இந்தோனேசியா அதிபா் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்

    மேலும், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணவும் ஜி7 நாடுகளை வலியுறுத்த உள்ளதாக அவா் கூறி உள்ளாா்.தொடர்ந்து உடனடியாக உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு புதின் உத்தரவிட வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

  • 26 Jun 2022 12:39 AM GMT

    ரஷிய ஏவுகணை ராணுவ வாகனங்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் ஆயுதப் படைகள் நேற்று ரஷியாவின் ஆறு ஏவுகணை ராக்கெட் அமைப்புகளுடன் கூடிய இராணுவ வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களை டான்பாசில் அழித்ததாக தெரிவித்துள்ளது.

  • 26 Jun 2022 12:24 AM GMT


    அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களை கொண்டு செல்வதில் சலுகைகளை லிதுவேனியா கொடுக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நௌசேடா கூறுகையில், எங்கள் எல்லை வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீது முழு கட்டுப்பாட்டை வைத்திருப்போம் என்று அவர் தெரிவித்தார்.

  • 25 Jun 2022 10:48 PM GMT


    ரஷியாவுக்கு எதிரான தற்போதைய பொருளாதாரத் தடைகள் போதாது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

    ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க உக்ரைனுக்கான இராணுவ உதவியும், ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளும் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • 25 Jun 2022 9:59 PM GMT

    கார்கிவ் அணுமின் நிலையத்தை ரஷிய ராணுவம் குண்டு வீசி சேதப்படுத்தியதாக உக்ரைன் புகார்

    உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையத்தை ரஷிய குண்டுவீசி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதாக என்று மாநில அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

    ரஷியா நடத்திய குண்டுவீசி தாக்குதலில் வேலைநிறுத்த தளத்தின் சில கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது, ஆனால் அணு எரிபொருள் மற்றும் கதிர்வீச்சு அளவுகள் சாதாரண வரம்பிற்குள் இருக்கும் பகுதியை பாதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • 25 Jun 2022 7:37 PM GMT

    கிழக்கு உக்ரைனில் 2-வது நகரத்தை துண்டிக்க ரஷியா முயற்சி

    கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதற்கு ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அங்கு சீவீரோடொனெட்ஸ் நகரில் இருந்து உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன. அங்குள்ள கட்டிடங்களை ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியும், குண்டு வீசியும் ரஷிய படைகள் தரை மட்டமாக்கி உள்ளன. 10 லட்சம் பேர் வசித்த நகரில் இப்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இங்குள்ள அஜோட் ரசாயன ஆலையில் உக்ரைன் படையின் ஒரு பிரிவினர், உள்ளூர்வாசிகள் 500 பேருடன் உள்ளனர்.

    இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் லிசிசான்ஸ்க் நகரை தெற்கில் இருந்து துண்டிக்க ரஷிய படைகள் முயற்சித்து வருகின்றன. இதை லுஹான்ஸ்க் கவர்னர் செர்கிய் ஹைடாய் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story