நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்


நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது ரஷ்யாவின் லுனா 25 விண்கலம்
x
தினத்தந்தி 17 Aug 2023 3:57 AM GMT (Updated: 17 Aug 2023 9:15 AM GMT)

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக லுனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா கடந்த 11 ஆம் தேதி ஏவியது.

மாஸ்கோ,

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திரயான்-3 விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது. சுமார் 100 கி.மீட்டர் உயரத்தில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் சந்திரயான்-3 தரையிறங்க உள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவும் லுனா 25 என்ற விண்கலத்தை நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 11 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வெறும் 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லுனா 25 விண்கலம் நுழைந்துள்ளது. வரும் 21 ஆம் தேதி இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.


Next Story