குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஓநாய்க்கு " மாயா" என பெயர் சூட்டிய சீனா...!


குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஓநாய்க்கு   மாயா என பெயர் சூட்டிய சீனா...!
x
தினத்தந்தி 20 Sep 2022 8:22 AM GMT (Updated: 2022-09-20T14:05:57+05:30)

குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆர்க்டிக் வகை ஓநாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனாவின் சினோஜீன் பயோடெக்னாலஜி.

பீஜிங்,

சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே ஆகும்.

பெய்ஜிங் ஆய்வகத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி பிறந்த இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குளோனிங் என்பது செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். குளோனிங் முறைக்கு அடிப்படை, கலவியில்லா இனப்பெருக்கம். உலகில் குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட முதல் விலங்கு செம்மறி ஆடு ஆகும்.

குளோனிங் தொழில்நுட்பம் மூலமாக இதுவரை பூனை, நாய், எலி, குரங்கு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்க பல நாடுகளில் தடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story