சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளி மந்திரி இடைநீக்கம்


சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளி மந்திரி இடைநீக்கம்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 2 Aug 2023 8:00 PM GMT (Updated: 3 Aug 2023 11:28 AM GMT)

சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து இந்திய வம்சாவளி மந்திரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சிங்கப்பூர்,

உலகில் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்த நாட்டின் பிரதமராக லீ சியென் லூங் இருக்கிறார். இவரின் அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை இலாகா மந்திரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன் இருந்தார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் ஊழல் புகார் குறித்தான மேல்விசாரணை நடத்த எதுவாக மந்திரி ஈஸ்வரனை பிரதமர் லூங் சஸ்பெண்டு செய்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியபோது இந்த தகவலை லூங் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் மாதச்சம்பளத்தையும் 46,750 சிங்கப்பூர் டாலரில் இருந்து (சுமார் ரூ.29 லட்சம்) 6,300-ஆக (ரூ.3 லட்சம்) அதிரடி குறைப்பும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சபாநாயகர் உள்பட 2 எம்.பி-களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


Next Story