சோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு


சோமாலியாவுக்கு 14 லட்சம் காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு
x

சோமாலியாவில் விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது.

மொகாதிசு,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 2016-ம் ஆண்டு முதல் காலரா தொற்று வேகமாக பரவுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 500 பேருக்கு காலரா தொற்று பரவி உள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அங்கு விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் காலரா இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே இதனை கட்டுப்படுத்த சோமாலியாவுக்கு 14 லட்சம் வாய்வழி காலரா தடுப்பூசி வழங்க ஐ.நா. முடிவு செய்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும். முதல்கட்டமாக அதிகளவில் பாதிப்பு ஏற்பட்ட 5 பிராந்தியங்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1 More update

Next Story