36 மணி நேரத்தில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை

Image Courtesy : AFP
ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதே சாதனையை படைத்து இருந்தது.
புளோரிடா,
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாவும் செயல்பட்டு வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் 36 மணி நேரத்தில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு ஜனவரி மாதமும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2 நாட்களில் 3 ராக்கெட்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து இருந்தது. தொலைத்தொடர்பை மேம்படுத்துவதற்காக புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் நிலையத்தில் இருந்து நேற்று செயற்கை கோளுடன் "ஃபால்கன் 9" விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
Related Tags :
Next Story






