78 வயதில் வந்த ஆசை...! பாலியல் குற்றச்சாட்டில் 'ஸ்குவிட் கேம்' நடிகர்!


78 வயதில் வந்த ஆசை...! பாலியல் குற்றச்சாட்டில் ஸ்குவிட் கேம் நடிகர்!
x

நடிகர் ஓ யோங்-சு மீது குற்றஞ்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார்.

சியோல்

நெட்பிளிக்ஸ் ஒடிடிட் தளத்தில் பிரபலமான தொடரான 'ஸ்குவிட் கேம்'-இல் நடித்தவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓ யோங்-சு. இவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

78 வயதான ஓ யோங்-சு ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். தற்போது இவர் மீதான பாலியல் வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் ஓ யோங்-சு மீது குற்றஞ்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முடித்துவைக்கப்பட்டது. தற்போது, பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை யோங்-சு மறுத்தார்.

அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் நடித்த விளம்பரங்களின் ஒளிபரப்பை நிறுத்த தென்கொரிய கலாச்சார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 50 வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்து வரும் ஓ யோங்-சு, ஸ்குவிட் கேம் மூலம்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் பல்வேறு தென்கொரிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

1 More update

Next Story