இலங்கை அரசியலமைப்பின் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


இலங்கை அரசியலமைப்பின்  21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
x

Photo Credit: AFP

இலங்கை அதிபாின் அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட்டது.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங்களைப் பறித்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சா் ஒருவா் தொிவித்தாா்.21-வது சட்டத்தின் படி அதிபா், அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவாா். தேசிய கவுன்சில் மற்றும் மேற்பாா்வை குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவாா்கள்.21 ஏ சட்ட திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story