'சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்' - கத்தியால் குத்தியவர் பேட்டி


சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம் - கத்தியால் குத்தியவர் பேட்டி
x

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்து விட்டார் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்ததாக அவரை தாக்கிய நபர் கூறியுள்ளார்.

நியூயார்க்,

இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75), அமெரிக்காவில் நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டபோது சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டி, மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்துள்ளார்.

அவரைத் தாக்கிய 24 வயதான ஹாதி மாட்டர் என்பவர் கைது செய்யப்பட்டு விட்டார். சவ்தாகுவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் 'நியூயார்க் போஸ்ட்' பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"அவர் உயிர் பிழைத்து விட்டார் என நான் கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்தேன். ருஷ்டியின் சர்ச்சைக்குரிய புத்தகத்தில் 2 பக்கங்களைத்தான் வாசித்துள்ளேன். அவரை எனக்கு பிடிக்காது. அவர் ஒரு நல்ல மனிதர் என நான் நினைக்கவில்லை.

சவ்தாகுவாவுக்கு அவர் வருகிறார் என டுவிட்டரில் தெரிந்து கொண்டு அங்கு செல்ல நான் ஈர்க்கப்பட்டேன். அவர் இஸ்லாம் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். அவரை நானாகத்தான் தாக்கினேன்."

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story