தைவான் பாதுகாப்பு அமைச்சக ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவர் ஓட்டல் அறையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி!


தைவான் பாதுகாப்பு அமைச்சக ஆராய்ச்சி பிரிவின் துணைத் தலைவர் ஓட்டல் அறையில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி!
x

தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார்.

தைபே,

தைவான் - சீனா பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சீன ராணுவம் தைவான் எல்லை பகுதிகளில் எவுகணை சோதனையை ஆரம்பித்துள்ளது.

இதை அமெரிக்கா மற்றும் தைவான் கண்டித்துள்ளன.தைவான் தங்கள் ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. தைவானுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க கூறியுள்ளது.

தைவான் தீவுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இதனிடையே தைவானுக்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் இன்று காலை ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இதய நோய் இருந்ததாகவும், இதயத்தில் ஸ்டென்ட் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவர் தனிப்பட்ட வேலைகளுக்காக தெற்கு தைவான் சென்று ஒட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சு வலி எற்பட்டதாக தெரிகிறது. அவர் அருகே யாருமில்லாததால் அவர் போராடி உயிரிழந்தார் எனத் தெரிகிறது.

57 வயதான யாங், மாரடைப்பால் தான் இறந்தார் என்றும், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எந்தவிதமான 'ஊடுருவல்' இருந்ததற்கான அறிகுறியும் இல்லை. ஆகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

1 More update

Related Tags :
Next Story