ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானிஸ்தானில் இல்லை - பாகிஸ்தானுக்கு தலிபான்கள் பதில்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானிஸ்தானில் இல்லை - பாகிஸ்தானுக்கு தலிபான்கள் பதில்
x

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

காபுல்,

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை, பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் கன்ஹார் பகுதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் இருக்கலாம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story