உலக அளவில் கொரோனா பாதிப்பு 53.54 கோடியாக உயர்வு..!


உலக அளவில் கொரோனா பாதிப்பு 53.54 கோடியாக உயர்வு..!
x

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.64 கோடியாக உயர்ந்துள்ளது.

நியூயார்க்,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகளவில் 228 நாடுகளை பாதித்து வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 54 லட்சத்து 31 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 20 ஆயிரத்து 401 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரத்து 250 பேர் குணமடைந்துள்ளனர்.


Next Story