கின்னஸ் உலக சாதனை படைத்த துபாயில் உள்ள தி ஸ்டோம் கோஸ்டர்


கின்னஸ் உலக சாதனை படைத்த துபாயில் உள்ள தி ஸ்டோம் கோஸ்டர்
x

உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையை துபாயில் உள்ள தி ஸ்டோம் கோஸ்டர் படைத்து உள்ளது.



துபாய்,


துபாயில் உலகின் அதிவேக ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையை தி ஸ்டோம் கோஸ்டர் படைத்து உள்ளது. இதுபற்றி கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, துபாய் ஹில்ஸ் மாலில் நிறுவப்பட்டு உள்ள தி ஸ்டோம் கோஸ்டர் என்ற ரோலர் கோஸ்டர் ஆனது செங்குத்து வடிவிலான பயணத்தின்போது மணிக்கு 41 கி.மீ. வேகத்தில் சென்று, உலகின் அதிவேக செங்குத்து வடிவிலான ரோலர் கோஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த ரோலர் கோஸ்டரானது, கட்டிடம் முழுவதும் உள்ளரங்கில் அமைக்கப்பட்ட 670 மீட்டர் நீளம் கொண்ட பாதையில் சுற்றி, சுற்றி பயணித்து அதில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு திரில்லிங்கான அனுபவம் அளிக்கிறது.

கடந்த பிப்ரவரி 17-ந்தேதி முறைப்படி இந்த ரோலர் கோஸ்டர் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை இமார் குழுமம் தனது சமூக ஊடக பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

அதன்பின்பு வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், பெரிய செய்தி, பெரிய கொண்டாட்டங்கள்!! உலகின் அதிவேக செங்குத்து வடிவிலான ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்ததற்காக அதனை கொண்டாடும் வகையில் புர்ஜ்கலீபாவில் ஒளி விளக்குகள் விண்ணை தொட்டன என்று அந்த குழுமம் தெரிவித்து உள்ளது.


Next Story