குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு


குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
x

குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது.



ஜெனீவா,



உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் இன்று கூறும்போது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். இதுவரை 75 நாடுகளில் பரவி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஒரு நோய்த்தொற்று பரவலானது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடி என்று முடிவு செய்வதற்கு 5 விசயங்கள் பரிசீலிக்கப்படுகின்றன என டெட்ராஸ் கூறியுள்ளார்.

இதன்படி, நாடுகள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்த குரங்கு காய்ச்சலானது இதுவரை கண்டிராத வகையில், பல நாடுகளுக்கும் வேகமுடன் பரவி வருகின்றன என தெரிய வந்துள்ளது

.

சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ், பொது சுகாதார அவசரநிலையை அறிவிப்பதற்கான 3 அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அவசரகால குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில், அதன் அறிவுரை ஏற்கப்படுகிறது.

அறிவியல் கோட்பாடுகள், சான்றுகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் தற்போது போதிய அளவில் இல்லை. பல அறியப்படாத விசயங்கள் நம்மிடம் விட்டு செல்லப்பட்டு உள்ளன.

மனித ஆரோக்கியத்திற்கான ஆபத்து, சர்வதேச பரவல் மற்றும் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான சாத்தியம் ஆகியவை பரிசீலனையில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன.

குரங்கம்மையின் ஆபத்து, உலக அளவில் மற்றும் அனைத்து பகுதிகளிலும் மித அளவில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதனால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டு உள்ளது என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் சர்வதேச போக்குவரத்தில் குறுக்கிடுவதற்கான தற்போது தொடர்ந்து குறைவாக உள்ளபோதும், உலக அளவில் நோய் பாதிப்பு பரவுவதற்கான ஆபத்தும் தெளிவாக காணப்படுகிறது.

புதிய வழிகளிலான பரிமாற்றத்தினால், ஒரு பரவலானது உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. அதனை பற்றி சிறிதளவே நமக்கு புரிந்துள்ளது. இந்த பரவலானது, சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளில் உள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story