இந்திய- ஆஸ்திரேலிய உறவை 'டி-20' கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்ட பிரதமர் மோடி


இந்திய- ஆஸ்திரேலிய உறவை டி-20 கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்ட பிரதமர் மோடி
x

இந்திய- ஆஸ்திரேலிய உறவு, டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி, இந்திய- ஆஸ்திரேலிய உறவு பற்றி பெருமிதத்துடன் சில கருத்துகளை கூறினார். அத்துடன் அவர் இரு தரப்பு உறவை டி-20 கிரிக்கெட்டுக்கு ஒப்பிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், "கிரிக்கெட் மொழியில் சொல்வதென்றால், நமது உறவு அதிரடியாக டி-20 கிரிக்கெட் போன்று வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய உறவு சிறப்பான ஒன்று. பிரதமர் அல்பானீசுடன் நடத்திய பேச்சு ஆக்கப்பூர்வமான ஒன்றாகும்" என தெரிவித்தார்.


Next Story