உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது - ஜெய்சங்கர்


உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது - ஜெய்சங்கர்
x

உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

நிகோசியா,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் சைப்ரஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க பங்களிக்கும் நாடாக உலகம் இந்தியாவை பார்க்கிறது. எழுந்து நிற்க வேண்டும் என்ற நிலை வரும் போது தைரியமாக எழுந்து நிற்கும் நடாகவும், சுதந்திரமான நாடாகவும் நம்மை பார்க்கின்றனர். ஒரே சமயத்தில் அனைவரையும் ஒரே (பேச்சுவார்த்தை இடத்திற்கு) மேடைக்கு கொண்டு வர நம்மிடம் திறமை உள்ளது' என்றார்.

1 More update

Next Story