பிரஸ்ஸல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி


பிரஸ்ஸல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
x
தினத்தந்தி 16 Oct 2023 10:32 PM GMT (Updated: 16 Oct 2023 10:55 PM GMT)

பிரஸ்ஸல்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரஸ்ஸல்ஸ் [பெல்ஜியம்],

மத்திய பிரஸ்ஸல்ஸில் நேற்று மாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

கொல்லப்பட்டவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பெல்ஜிய ஊடக அறிக்கைகளின்படி, சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளது. சம்பவத்தின் உள்நோக்கம் என்ன என்பது குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "பிரஸ்ஸல்ஸில் நடந்த இந்த கோழைத்தனமான தாக்குதலின் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தொடர்ந்து நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். பிரஸ்ஸல்ஸ் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story