கனடாவில் லாரி மோதி 2 பேர் பலி


கனடாவில் லாரி மோதி 2 பேர் பலி
x

கனடாவில் லாரி மோதிய விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

ஒட்டாவா,

கனடாவின் கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் நேற்று முன்தினம் சாலையோரம் சிலர் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

பின்னர் அங்கு சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தினை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Related Tags :
Next Story