இங்கிலாந்தில் அரசியலை விட்டு விலகும் பாதுகாப்பு துறை மந்திரி


இங்கிலாந்தில் அரசியலை விட்டு விலகும் பாதுகாப்பு துறை மந்திரி
x

கோப்புப்படம்

இங்கிலாந்து பாதுகாப்பு துறை மந்திரி அரசியலை விட்டு தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பாதுகாப்பு மந்திரியாக உள்ளவர் பென் வாலஸ் (வயது 53). இந்தநிலையில் அடுத்து வரும் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

இவர் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய 3 பிரதமர்களின் கீழ் பாதுகாப்பு மந்திரியாக பணியாற்றி உள்ளார். அனுபவம் வாய்ந்த பென் வாலஸ் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

1 More update

Next Story