இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரியாக டேவிட் கேமரூன் நியமனம்


இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரியாக  டேவிட் கேமரூன் நியமனம்
x
தினத்தந்தி 13 Nov 2023 11:05 AM GMT (Updated: 13 Nov 2023 12:23 PM GMT)

வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், இன்று நீக்கப்பட்டார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து மந்திரி சபையில் மேலும் ஒரு அதிரடி மாற்றத்தையும் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டேவிட் கேமரூன் கடந்த 2010-2016 முதல் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகினார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பொறுப்புக்கு டேவிட் கேமரூன் வந்துள்ளார். அதேபோல், வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story