"உக்ரைனில் நடந்த போரை மறந்துவிடாதீர்கள்": வெனிஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரை!


உக்ரைனில் நடந்த போரை மறந்துவிடாதீர்கள்: வெனிஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரை!
x

வெனிஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றினார்.

ரோம்,

இத்தாலியில் வெனிஸ் திரைப்பட விழா புதன்கிழமை தொடங்கியது. 79வது ஆண்டு வெனிஸ் திரைப்பட விழா தொடக்க நிகழ்வின் போது காணொலி மூலம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தோன்றி உரையாற்றினார்.

"உக்ரைனில் நடந்த போரை மறந்துவிடாதீர்கள்" என்று உலகளாவிய சமூகத்திற்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசினார். மேலும், உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர்கள் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டன.

முன்னதாக மே 2022 இல், கேன்ஸ் திரைப்பட விழாவிலும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு எழுச்சி வாய்ந்த உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசுகையில், உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் "தி கிரேட் டிக்டேட்டர்" திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரை கண்டனம் செய்வதில் இத்திரைப்படத்தின் பங்கு குறித்தும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டு பேசினார்.

ஜெலென்ஸ்கி பேசியதாவது, "தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உக்ரைனில் இறக்கின்றனர். அவர்கள் இனி மேல் எழுந்திருக்கப் போவதில்லை... சினிமா அமைதியாக இருக்குமா, அல்லது அதைப் பற்றிப் பேசுமா? நம் காலத்தில் சினிமா அமைதியாக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் புதிய சாப்ளின்கள் தேவை" என்றார்.


Next Story