தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்


தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்
x

உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில், ரஷிய ராணுவத்துக்கு சொந்தமான 3 ராணுவ டாங்கிகள் மற்றும் 11 கவச வாகனங்களை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

ரஷியா இப்போது கருங்கடலில் 17 கப்பல்களைக் கொண்டுள்ளது. இதில் 2 ஏவுகணை வாகனங்கள் உட்பட 16 கலிப்ர் ஏவுகணைகள் கப்பலில் உள்ளன. ரஷிய துருப்புகள் அங்கிருந்து பின்வாங்கும் போது, பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் கட்டிடங்கள் மற்றும் பிற இடங்கள் ஆகியவற்றில் ரஷிய படையினர் கண்ணி வெடிகுண்டுகளை வைத்திருப்பார்கள் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story