சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மலரஞ்சலி


சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மலரஞ்சலி
x

சிங்கப்பூரில் மிக பழமையான 1855-ம் ஆண்டையொட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

சிங்கப்பூர்,

இந்தோனேசியாவில் 10-வது ஆசியன் பாதுகாப்பு மந்திரிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜகர்த்தா நகருக்கு சென்றார்.

அவர் நேற்று முன்தினம் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியா மற்றும் வியட்நாமின் பாதுகாப்பு துறை மந்திரிகளுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்தினார்.

இதன்பின் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில், சிங்கப்பூருக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கு' என்னுடைய மனப்பூர்வ அஞ்சலியை செலுத்தினேன் என தெரிவித்து உள்ளார்.

1945-ம் ஆண்டு, 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கான' நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல்லை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டினார். இதன்பின் 1995-ம் ஆண்டில், சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் ஆனது, அதே இடத்தில் இந்திய தேசிய ராணுவத்திற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி நினைவிடம் ஆக்கியது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் மிக பழமையான 1855-ம் ஆண்டையொட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.


Next Story