"சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது" - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து


சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து
x

அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு சிரிய அரசாங்கம் பல முறை வலியுறுத்தியுள்ளதாக பைசல் மேக்தாத் கூறினார்.

டமாஸ்கஸ்,

சிரியாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் கீர் பெடர்சன், டமாஸ்கஸ் நகருக்கு வருகை தந்தார். அவரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பைசல் மேக்தாத் நேரில் சென்று வரவேற்றார். இந்த சந்திப்பின் போது சிரியாவின் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பைசல் மேக்தாத், சிரியாவில் சட்டவிரோதமாக முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை தடுப்பதில் ஐ.நா. சபை அதிக பங்காற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். 2014-ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, அமெரிக்க படைகள் சிரியாவில் பல ராணுவ தளங்களை நிறுவியுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு சிரிய அரசாங்கம் பல முறை வலியுறுத்தியுள்ளது என்றும், சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது என்றும் சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பைசல் மேக்தாத் தெரிவித்துள்ளார்.


Next Story