அமெரிக்க அதிபர் பைடன், போப் பிரான்சிஸ் உள்பட உலக தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து


அமெரிக்க அதிபர் பைடன், போப் பிரான்சிஸ் உள்பட உலக தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பைடன், போப் பிரான்சிஸ் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



வாஷிங்டன்,


ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், உலக அளவில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த சூழலில், உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பண்டிகை கால கொண்டாட்டங்களின்போது ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரம் செலவிட முடியும் என நானும், ஜில்லும் நம்புகிறோம்.

இந்த தருணத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எங்களது இருதயங்களில் ஒரு சிறப்பு இடம் வைத்திருக்கிறோம். எங்களது குடும்பத்தில் இருந்து உங்களுக்கு நாங்கள் அமைதியான கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.


Next Story