அமெரிக்க அதிபர் பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ராஜினாமா முடிவு


அமெரிக்க அதிபர் பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ராஜினாமா முடிவு
x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார்.



வாஷிங்டன்,



அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருப்பவர் மருத்துவர் அந்தோணி பாசி. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட மக்களை காக்கும் பணியில் அதிபருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் சிறப்புடன் செயல்பட்டார்.

இந்நிலையில், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான மையத்தின் இயக்குனர் மற்றும் அதிபர் பைடனுக்கான தலைமை மருத்துவ ஆலோசகர் ஆகிய பதவிகளில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் பதவியில் இருந்து வருகிற டிசம்பர் மாதத்தில் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார். எனினும் ஓய்வு பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதவிகளில் இருந்து இந்த ஆண்டில் விலகி விட அவர் முடிவு செய்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் கூடுதலாக அரசு பணியாற்றிய நிலையில், எனது தொழிலின் அடுத்த சகாப்தத்தில் தொடர திட்டமிட்டு இருக்கிறேன்.

அதற்கான ஆற்றலும் தன்னிடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளதுடன், எனது துறையின் மீது பேரார்வமும் உள்ளது என அவர் கூறியுள்ளார். மேற்கூறிய பணிகள் தனது வாழ்நாளில் கிடைத்த கவுரவம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


Next Story