இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்..!


இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்..!
x
தினத்தந்தி 17 Oct 2023 4:59 AM GMT (Updated: 17 Oct 2023 6:38 AM GMT)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நடக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்கிறார் .

வாஷிங்டன்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 11-வது நாளை எட்டியிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிறகு, ஜோர்டானில் நடைபெறும் மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம், எகிப்து அதிபர்களையும், ஜோர்டன் மன்னர் அப்துல்லா ஆகியோரையும் பைடன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹமாசின் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.


Next Story