இந்தியா-அமெரிக்கா உறவுமுன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது-வெள்ளை மாளிகை அறிக்கை


இந்தியா-அமெரிக்கா உறவுமுன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது-வெள்ளை மாளிகை அறிக்கை
x

Photo Credit: AFP

இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்துளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் பியர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "கடந்த மாதம் இந்திய பிரதமரின் பயணம் மிகவும் வெற்றிகரமாகவும் முக்கியமானதாகவும் இருந்தது.

இந்தியாவுடனான உறவு முன்னெப்போதையும் விட வலுவடைந்துள்ளது. உங்களுக்குத் தெரியும், நாங்கள் பல முக்கிய ஒப்பந்தங்களை அறிவித்தோம். அவற்றில் சில செயல்படுத்தப்படுகின்றன. நமது நீண்ட கால எதிர்காலம் மற்றும் இந்தியாவுடனான உறவு தொடர்பாக நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்து வருகிறோம். அது தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story