முறைகேடுகளை களைய எச் 1 பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்


முறைகேடுகளை களைய எச் 1 பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்
x

முறைகேடுகளை களைய எச் 1 பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணி புரிவதற்காக அமெரிக்காவில் எச் 1 பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.

இந்த நிலையில் எச் 1 பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. எனவே இந்த எச் 1 பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச் 1 பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


Next Story