அமெரிக்காவில் 5-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்


அமெரிக்காவில் 5-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் 5-ந்தேதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன.

இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்கா செல்கிறவர்கள், எந்த நாட்டினராக இருந்தாலும், தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் போட்டிரா விட்டாலும் அவர்களுக்கு 5-ந் தேதி முதல் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story