நைஜரில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்


நைஜரில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்
x

image courtesy: AFP

முதற்கட்டமாக அடுத்த ஒரு மாதத்தில் 1,000 ராணுவ வீரர்கள் நைஜரில் இருந்து வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நியாமி,

ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாட்டின் படைகள் முகாமிட்டு இருந்தன. ராணுவம் ஆட்சிக்கு வந்த பிறகு பிரான்ஸ் நாட்டின் படைகளை வெளியேறுமாறு ராணுவ ஆட்சிக்குழு தலைவர் அலி மஹாமன் லாமைன் சைனி உத்தரவிட்டார். அதன்படி பிரான்ஸ் நாட்டு படைகள் நைஜரில் இருந்து வெளியேறின.

இந்த நிலையில் நைஜரில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளும் வெளியேற வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடம் நைஜர் ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அடுத்த ஒரு மாதத்தில் 1,000 ராணுவ வீரர்கள் நைஜரில் இருந்து வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Next Story