எரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்


எரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்
x

Photo Credit: AFP

தினத்தந்தி 2 May 2024 7:44 AM IST (Updated: 2 May 2024 5:56 PM IST)
t-max-icont-min-icon

எரிமலை வெடிப்பு காரணமாக சாம் ரதுலங்கி சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

எரிமலை வெடிப்பை தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டன.

1 More update

Next Story