என்ன..!! 2027-ல் மனித உயிரினமே இருக்காதா...? டைம் டிராவலரின் திடுக்கிடும் அனுபவம்


என்ன..!! 2027-ல் மனித உயிரினமே இருக்காதா...? டைம் டிராவலரின் திடுக்கிடும் அனுபவம்
x

2027-ம் ஆண்டில் மனித உயிரினமே இல்லாத நிலையை பார்த்து அதிர்ந்து போனோம் என டைம் டிராவலர்கள் தங்களது திடுக்கிடும் அனுபவங்களை வெளியிட்டு உள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

உலகம் தோன்றியது பற்றிய மனிதர்களின் தேடல்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. பூமியை கடந்து வேறு கிரகங்களில் மனிதர்கள் போன்ற உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றனவா? என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய செய்திகளும் பரவி மக்களுக்கு ஆச்சரியமூட்டி வருகின்றன. இதற்காகவே இருக்க கூடிய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மற்றும் வருங்காலங்களில் முறையே நடந்த மற்றும் நடக்க இருக்க கூடிய சம்பவ பகுதிகளுக்கு நேரில் செல்ல கூடியவர்களான டைம் டிராவலர்கள் எனப்படுபவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.



இதன்படி, மரியா என்பவர் டைம் டிராவலராக வரும் 2027-ம் ஆண்டுக்கு பயணம் செய்து உள்ளார். அதன் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு பகுதி பாலைவனம் போல், ஆட்கள் யாருமின்றி இருட்டாக காட்சி தருகிறது.

இதற்கு ஜேவியர் என்பவரை டேக் செய்துள்ளார். ஜேவியரும், மரியாவை போன்று ஒரு டைம் டிராவலர் ஆவார். தன்னை டைம் டிராவலர் என அறிவித்து கொண்டு அது தொடர்பான பணியில் ஜேவியர் ஈடுபட்டு வருகிறார்.

மரியா மற்றும் ஜேவியர் இருவரும் டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில் ஜேவியர் தனது டிக்டாக் வீடியோவை unicosobreviviente ('தப்பி பிழைப்பவர் மட்டுமே') என்ற பெயரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ஜேவியர் தொடக்க காலத்தில், டைம் டிராவலராக சென்ற தனது பயண அனுபவத்தின் ஒரு பகுதியாக ஆட்கள் யாருமற்ற, கைவிடப்பட்ட பகுதிகள், கட்டிடங்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றை புகைப்படங்களாக எடுத்து வந்து டிக்டாக்கில் வெளியிட்டு வந்து உள்ளார்.

அவை ஸ்பெயின் நாட்டையும் சுற்றியும் எடுக்கப்பட்டு இருந்தன. இவை எல்லாம் வருங்காலத்தில் காணப்பட கூடியவை என தகவல் வெளியிட்டார்.

இதற்காகவே தொடக்க காலத்தில் ஜேவியருக்கு என கோடிக்கணக்கான டிக்டாக் பாலோயர்கள் இருந்து உள்ளனர். ஒரு சில ஆண்டுகளில் மனிதர்களின் பேரழிவு காத்திருக்கிறது என்றும் மனித இனம் அழிந்து போக உள்ளது என்றும் நெட்டிசன்களை ஜேவியர் எச்சரிக்கை செய்தும் உள்ளார்.

இதில், தனது கணக்கில் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் முதன்முதலில் அவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், நான் ஒரு மருத்துவமனையில் இருந்து விழித்து எழுந்தேன். என்ன நடக்க போகிறது என எனக்கு தெரியாது.

இன்று 2027-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி. நான் மட்டுமே நகரில் தனியாக இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

எனினும் அவரது இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு வலைதளத்தில் வெளியான செய்தியில், உலகத்தின் முடிவு 2027-ம் ஆண்டு அக்டோபர் 2-க்கு தள்ளி போயுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், உலகத்தின் தோற்றம் பற்றிய தேடலுக்கே உரிய விடை இன்னும் கிடைக்காத சூழலில், அதற்குள் உலகத்தின் முடிவு பற்றி மனிதர்கள் விவாதிப்பது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலத்தில், இதுபோன்ற விசயங்கள் அதிக அளவில் பரவின. இதன்படி, 2022-ம் ஆண்டு டிசம்பர் உலகத்தின் கடைசியாக இருக்கும் என முன்பு கூறப்பட்டது. எனினும், அது தள்ளி போயுள்ளது என்றும் 2027-ம் ஆண்டில் அது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வருகிற 2024-ம் ஆண்டை இந்த உலகை வைரசானது எடுத்து கொள்ளும் என்றும் டைம் டிராவலர் ஒருவர் முன்பு பதிவிட்டார்.

இதற்கு முன்பு, மில்லினியம் எனப்படும் 2000-ம் ஆண்டு வருவதற்கு முன்பும் கூட இதேபோன்று உலகம் முடிவுக்கு வர போகிறது என்ற வகையில் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தனர். எனினும், அதனை கடந்து இரு தசாப்தங்கள் உருண்டோடி விட்டன. எனினும், இதுபோன்ற ஆக்கப்பூர்வ..!! ஆராய்ச்சியில் ஒரு பிரிவினர் இன்னும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story