வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்: விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு


வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்: விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு
x

Image Courtesy: AFP 

புதிய வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ஐ அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

கலிபோர்னியா,

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை "எடிட்" செய்ய வழி இல்லை. ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால், அதனை எடிட் செய்திட முடியாது. மாறாக அதை நீக்க வேண்டிய நிலை தான் இருந்தது . நீண்ட வாக்கியங்களில் குறுஞ்செய்தி அனுப்பும் போது, சிறு வாக்கிய தவறுக்காக மொத்த குறுஞ்செய்தியையும் நீக்க செய்வது பயனர்களுக்கு சிக்கலாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ஐ அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம்.


Next Story