அர்ஜென்டினாவில் உலக பாரம்பரிய சின்னமான லாஸ் அலர்செஸ் தேசிய பூங்காவில் காட்டுத்தீ


அர்ஜென்டினாவில் உலக பாரம்பரிய சின்னமான லாஸ் அலர்செஸ் தேசிய பூங்காவில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 28 Jan 2024 8:45 PM GMT (Updated: 2 Feb 2024 11:54 AM GMT)

காட்டுத்தீ காரணமாக இதுவரை 600 ஹெக்டர் அளவில் சேதம் அடைந்துள்ளது.

லாஸ் அலர்செஸ்,

அர்ஜென்டினாவில் சுபுட் மாகாணத்தில் லாஸ் அலர்செஸ் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவனது கிட்டதட்ட 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் அளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த பூங்கா, பல்லாயிரக்கணக்கான அரியவகை உயிரினங்களுக்கும் பழமையான மரங்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறது. இதன் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இந்த பூங்காவை உலக பராம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் அருகே காட்டுத்தீ உருவானது. தீயானது சற்று நேரத்தில் மளமளவென பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக இதுவரை 600 ஹெக்டர் அளவில் சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமை கொண்டு வரமுடியாத காரணத்தினால் அண்டை நாடுகளின் உதவியை பெற அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளது.


Next Story