தைவான் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் - சீனா


தைவான் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் - சீனா
x

தைவானை சுதந்திர நாடாக அங்கீகாித்தால் அதன் மீது போா் தொடுக்க தயங்கமாட்டோம் என அமொிக்காவிடம் சீனா தொிவித்துள்ளது.

பெய்ஜிங்,

சிங்கப்பூரில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா்.

இந்த சந்திப்பில் தைவான் பிரச்சினையை பற்றி விவாதித்தனா். தைவான் நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தினாா்.

இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒரு பகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போா் தொடுக்க சீனா தயங்காது என அவா் எச்சாித்தாா்.

மேலும், தைவான் சீனாவின் தைவான் எனவும் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது.தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதிசெய்யும் என அவா் சபதம் தொிவித்தாா்.


Next Story