பாகிஸ்தான் சீனாவின் காலனியாக மாறும் பலுசிஸ்தான் ராணுவ பாதுகாப்பு அமைப்பை நிறுத்த முடிவு


பாகிஸ்தான் சீனாவின் காலனியாக மாறும் பலுசிஸ்தான் ராணுவ பாதுகாப்பு அமைப்பை நிறுத்த முடிவு
x

பாகிஸ்தான் சீனாவின் காலனியாக மாறுமா? சீனா பலுசிஸ்தானில் ‘ராணுவ பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்த விரும்புகிறது.

கராச்சி:

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் முதல்முறையாக சீனா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் பயணத்திற்கான உண்மையான காரணம் வெளிவரத் தொடங்கி உள்ளது.

ஜெனரல் பஜ்வா தலைமையிலான பாகிஸ்தானின் முப்படைகளின் குழு, ஒரு முக்கிய சந்திப்பிற்காக சமீபத்தில் சீனா சென்றிருந்தது. இந்த சந்திப்பின் போது சீன ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சீனாவின் பாகிஸ்தான் திட்டத்தில் பணிபுரியும் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் சீனர் கொல்லப்படுவதாக சீனா கூறி உள்ளது.சீனாவின் அதிருப்திக்கு மத்தியில், சீன குடிமக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறி இருந்தார்.முழு பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக, சீன ஆசிரியர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, அனைத்து சீன ஆசிரியர்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறினர். இது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனர்களை குறிவைத்து தாக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்

பலூச் போராட்டகாரர்களின் கொடூரமான தாக்குதல்களால் அஞ்சிய சீனா, இப்போது குவாதர் உட்பட பலுசிஸ்தானின் பல பகுதிகளில் தனது 'பாதுகாப்பு அமைப்புகளை' நிலைநிறுத்த விரும்புகிறது.சீனாவின் இந்த திட்டத்தை பரிசீலிக்க ஜெனரல் பஜ்வா அவகாசம் கோரியுள்ளார்.

சீனா தற்போது குவாடர் உள்ளிட்ட பலுசிஸ்தானில் தனது பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்த முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளுடன் அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, தற்போது சீனா, ஜெனரல் பஜ்வாவிடம், கூட்டாண்மையை அதிகரிக்குமாறு வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளது.

சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் ஷாபாஸ் ஷெரீப்பிடம் இது தொடர்பாகப் பேசினார். சீனா தனது பாதுகாப்பு ஏஜென்சிகளை பாகிஸ்தானில் நிறுத்தினால், அது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதே நேரத்தில், இது பாகிஸ்தானின் இறையாண்மையை பலவீனப்படுத்தும் என்றும், சீனப் பாதுகாப்பு ஏஜென்சிகள் என்ற பெயரில் ராணுவ வீரர்கள் வந்தால், பாகிஸ்தானின் இந்தப் பகுதி சீனாவின் 'காலனி'யாக மாறும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Next Story