அரசு அளிக்கும் வீட்டு வசதி திட்டம்


அரசு  அளிக்கும்  வீட்டு  வசதி  திட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2017 2:30 AM IST (Updated: 15 Dec 2017 7:33 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலையில் வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கி, அவர்களது தேவையை பூர்த்தி செய்ய அரசின் வீட்டு வசதி வாரியம் செயல்படுகிறது.

க்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலையில் வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கி, அவர்களது தேவையை பூர்த்தி செய்ய அரசின் வீட்டு வசதி வாரியம் செயல்படுகிறது. பலதரப்பட்ட மக்களின் வீட்டு வசதி தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், மக்கள் நெருக்கத்தை குறைக்கவும், பெரு நகரங்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் கீழ்க்காணும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

* அபிவிருத்தி செய்யப்பட்ட மனைகளை உருவாக்குதல்.

* சமூக அளவில் பலதரப்பட்ட மக்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்தல்.

* தரமான பொருட்களை கொண்டு உயர் தரமான வடிவமைப்புடன், குறைபாடுகள் இல்லாத கட்டிடங்கள் அமைத்தல்.

* மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற விலைகளில் குடியிருப்புகள் கட்டுதல்.

* வீட்டு வசதி நிதி நிறுவனம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன்

பெற்றுத்தர ஏற்பாடு செய்தல்.

* தெளிவான மற்றும் விற்பனைக்கேற்ற உரிமைப்பத்திரத்தை உறுதிப்படுத்துதல்.

* நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள்.

* நுகர்வோரின் திருப்திக்கேற்ப விற்பனைக்குப் பின்னர் தரமான சேவை வழங்குதல்.

* முக்கிய நகரங்களுக்கு    அருகில்   துணை   நகரங்களை உருவாக்குதல்.

Next Story