வீடுகள் மறு சீரமைப்பு
பழைய வீடுகளை மறு சீரமைப்பு செய்யும்போது உபயோகமில்லாத பொருட்களைஅப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, பழைய பொருட் களிலிருந்து எதிர்மறை அலை வீச்சு வீடுகளில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.
பழைய வீடுகளை மறு சீரமைப்பு செய்யும்போது உபயோகமில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக, பழைய பொருட் களிலிருந்து எதிர்மறை அலை வீச்சு வீடுகளில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. உபயோகத்தில் இல்லாத பாதிப்படைந்த கட்டில்கள், பழுதான அலமாரிகள், சேதமடைந்த பொம்மைகள், பழைய தட்டுமுட்டு சாமான்கள், பழைய படுக்கைகள், தலையணைகள், புத்தகங்கள் ஆகியவற்றை தக்க முறையில் அப்புறப்படுத்தினாலே, மறு சீரமைப்பு பணிகள் பாதியளவு முடிந்ததற்கு சமம். ‘செண்டிமெண்டு’ காரணமாக மேற்கண்ட பொருள்களை வீடுகளிலிருந்து அப்புறப்படுத்துவதில் குழப்பம் ஏற்படும்பட்சத்தில், அவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு அல்லது அமைப்புகளுக்கு இலவசமாக கொடுத்து விடலாம்.
Related Tags :
Next Story