கோடி லிங்க தரிசனம்


கோடி லிங்க தரிசனம்
x

ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கு அருகில், பாறைகளில் கோடி லிங்கங்கள் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ளன. கோடி லிங்கங்கள் இருப்பதால், துங்கபத்ரா நதிக்கு ‘கோடி லிங்க சக்கர தீர்த்தம்’ என்றும் பெயர்.

கர்நாடகாவின் சிறப்புமிக்க இடங்களில் ஒன்று, ஹம்பி. இது வட கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் அதன் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் இடிபாடுகளுக்குள் இருக்கிறது, தற்போதைய ஹம்பி. இந்த ஊர், விஜயநகர பேரரசு காலத்திற்கும் முற்பட்டது என்கிறார்கள்.

தற்போது ஹம்பி, ஒரு முக்கியமான புராதன விஷயங்கள் அடங்கிய இடமாக பார்க்கப்படுகிறது. பல வியப்பூட்டும் அம்சங்களை தன்னகத்தே கொண்ட விருப்பாட்சா கோவில், பழம்பெரும் நகரத்தின் நினைவுச்சின்னங்களைத் தாங்கி இந்த ஊர் நிற்கிறது. அதன் ஒரு பகுதிதான் இங்கே நாம் பார்க்கும் சிவலிங்கங்கள்.

ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கு அருகில், பாறைகளில் கோடி லிங்கங்கள் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதி இது. கோடி லிங்கங்கள் இருப்பதால், இந்த நதிக்கு 'கோடி லிங்க சக்கர தீர்த்தம்' என்றும் பெயர். ராமாயண காலத்தில் துங்கபத்ரா நதி, 'பம்பா' என்றும், மகாபாரத காலத்தில் 'துங்கேனா நதி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.


Next Story